வனாந்திர யாத்திரையில் களைத்து நான் - Vanandhira yaathiraiyil kalaiththu naan

வனாந்திர யாத்திரையில் களைத்து நான்

சோர்ந்து போகும் நேரங்களில்

நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்

என் வாழ்வு செழித்திடுமே

செங்கடல் எதிர்த்து வந்தும்

பங்கம் வந்திடாமல் அங்கு

பாதை ஒன்று கண்ணில் தெரியுமே

விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்

தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார்

– வனாந்திர

தேவனை மறக்கச் செய்யும்

வேதனை நிறைந்த வாழ்வை

சத்துரு விதைத்திடும் போது

மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்

காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே

– வனாந்திர

இனிமையற்ற வாழ்வில் நான்

தனிமை என்று எண்ணும் போது

மகிமை தேவன் தாங்கிடுவாரே

இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்

இனி எனக்கென்றுமே தாழ்வு இல்லையே

– வனாந்திர

வனாந்திர யாத்திரையில் களைத்து நான் - Vanandhira yaathiraiyil kalaiththu naan

Vanandhira yaathiraiyil kalaiththu naan

Sōrndhu pōgum nērangalil

Nesarin satham ennil kēttidum

En vaazhvu sezhithidumē

Sengadal edhirthu vandhum

Pangam vandidaamal anggu

Pādai onru kannil theriyumē

Viduvippar Aandavar nalkuvaar pudhu belan

Thaduththidum sathrukkal azhindhu maaluvaar

– Vanandhira

Dhevanai marakkach seyyum

Vēthanai niraindha vaazhvvai

Saththuru vithaiththidum pōdhu

Maaravin kasantha neer madhuramāga maaridum

Kārirul neengida velichcham thondrumē

– Vanandhira

Inimaiyatra vaazhvil naan

Thanimai endru ennun pōdhu

Mahimai Dhevan thaangiduvaarē

Inimaiyaai mannāvai varushikkap pannuvaar

Ini enakkendrumē thāzhvu illaiyē

– Vanandhira